என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருக்கலைப்பு செய்த இளம்பெண் சாவு: மருந்தகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
- தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார்.
- இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவரது மனைவி அமுதா (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அமுதா மீண்டும் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதைத்தொடர்ந்து இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார். அதில் பெண் சிசு என தெரிய வந்ததால் கருவை கலைக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதை யொட்டி அந்த மருந்தகத்தில் கருவை கலைப்ப தற்கான மாத்திரைகள் வழங்க ப்பட்டது. தொடர்ந்து நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற அமுதவிற்கு ரத்தப்போக்கு இருந்ததாகவும் இதனால் அருகே உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற அவர் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், தேசிய சுகாதார குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் மருந்தகத்தில் மருத்துவம் பார்க்கப்படுகிறதா? கருக்கலைப்பு செய்யப்பட்டதா? கருக்கலைப்பு செய்வதற்கான உபகரண ங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கி உள்ளார். இவர் ஐ.டி.ஐ மட்டும் முடித்துள்ளதாகவும், முறையாக அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும், மேலும் கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது. இதேபோல் விருகாவூர், மலைக்கோட்டாலம், இந்திலி ஆகிய பகுதிகளில் இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர். செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர். வடிவேல் மீது கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம் ஆகிய காவல் நிலையங்களில் கருக்கலைப்பு செய்ததாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்