search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களின் கோரிக்கை ஏற்பு - உடன்குடி பேரூராட்சியில் 2 இடங்களில் வேகத்தடை அமைப்பு
    X

    உடன்குடி பேரூராட்சியில் வேகத்தடை அமைக்கப்படும் காட்சி.

    பொதுமக்களின் கோரிக்கை ஏற்பு - உடன்குடி பேரூராட்சியில் 2 இடங்களில் வேகத்தடை அமைப்பு

    • பேரூராட்சி தலைவர் சம்பவ இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு 2 இடத்தில் வேகத்தடைஅமைக்க உத்தரவிட்டார்.
    • அதன்படி 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுஎண் 16-ல் தங்கநகரம் செல்லும் தார்சாலைவழியாக பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக செல்கின்றனர். இந்த ரோட்டில் பலமுறை வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று இப் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முகமதுஆபித் உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். பேரூராட்சி தலைவர் சம்பவ இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு 2 இடத்தில் வேகத்தடைஅமைக்க உத்தரவிட்டார். அதன்படி 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

    இதைப்போல கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தெருவிளக்கு, குடிநீர் குழாய் சரி செய்தல் போன்றவற்றிற்கு நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்தால் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆலோசனையின்படி, பேரூராட்சி தலைவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரச்சினையை தீர்வு செய்கிறார். மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுபகுதியிலும், அடிக்கடி நேரில் சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×