என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
யோகாசனத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
- தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, சரவணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
- தற்காப்பு கலைகளின் சாகச நிகழ்ச்சிகள் பார்ப்ப வர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
ஓசூர்,
சென்னையில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடந்த யோகாசன உலக சாதனை நிகழ்ச்சியில் சமகோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் 27 நிமிடம் எட்டு நொடிகள் அமர்ந்து யோகா உலக சாதனை படைத்த ஓசூரை சேர்ந்த மகா யோகம் ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவர்களுக்கு பாராட்டு விழா ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர் ஆந்திர சமிதி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓசூர் ஏ.எஸ்.பி அரவிந்த், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், டி.வி.எஸ்.மோட்டார்ஸ் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, சரவணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஜென்ஸ்கர் மகா யோகம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில், யோகாசனம் பயிற்சி பெறும் மாணவர்கள் நிகழ்த்தி காட்டிய தற்காப்பு கலைகளின் சாகச நிகழ்ச்சிகள் பார்ப்ப வர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
பின்னர் யோகா உலக சாதனை படைத்த ஓசூரை சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சாதனை நிகழ்த்திய குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்று உற்சாகப்படுத்தினார்கள்.
தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த யோகா பயிற்சியாளர் ஜெகதீசன் கூறியதாவது:-
மகா யோகம் என்று அழைக்கக்கூடிய மிகப்பிரமாண்டமான யோக கலையை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த கலை வாயிலாக உலக மக்களுக்கு தெரிவிப்பது, இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமானது. அதில் மிகவும் முக்கியமாக பங்கு வகிப்பது நமது உடல். உடல் மனம் மற்றும் நமது சுவாசப் பாதையை வலுப்படுத்தக்கூடிய அமைப்பு பற்றிய கலைகள் கற்றுக் கொடுக்கிறோம். ஜென்ஸ்கர் என்று அழைக்கப்படும் குணப்படுத்தக்கூடிய தற்காப்பு கலையில் அனைத்து விதமான கராத்தே, குங்ஃபூ, ஜூடோ, சிலம்பம், தாய்ச்சி உள்ளிட்டவைகளை சேர்த்து அடங்கிய கலைகளை பயிற்றுவித்துக் கொண்டுள்ளோம்.
இன்றைய சமுதாயத்திற்கு இந்த கலை வாயிலாக மிகவும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எங்களால் இயன்ற பயிற்சிகளை வழங்குகின்றோம். எங்களால் முடிந்த நன்மைகளையும் இந்த உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த தற்காப்பு கலையை பயன்படுத்தி உலக சாதனைகள் படைத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்