search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரண்டு கைகளும் இல்லாத மாணவி பிளஸ்-2 தேர்வில் சாதனை - அமைச்சர்கள் பாராட்டு
    X

    மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இரண்டு கைகளும் இல்லாத மாணவி பிளஸ்-2 தேர்வில் சாதனை - அமைச்சர்கள் பாராட்டு

    • இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
    • மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ரோடு அருகில் உள்ள அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் விடப்பட்ட பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி த.லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அந்த மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்துவாழ்த்து க்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகரமன்ற தலைவர்செல்வராஜ், அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தின் செயலர்கள் கலாவதி, ஞானசம்பந்தம், தலைமையாசிரியர்கள், மாணவ- மாணவிகள், அரசு வழக்கறிஞர்கள் தனிகை பழனி, அருள்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×