search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசியில் மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை - துணை இயக்குனர் எச்சரிக்கை
    X

    நெல்லை, தென்காசியில் மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை - துணை இயக்குனர் எச்சரிக்கை

    • பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.
    • மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி போன்ற விதை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.

    இதுபோன்ற அரசு அங்கீகாரம் இல்லாத மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகளை விற்பனை செய்வதும், வாங்கி பயிர் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை விற்பனை செய்வது தெரிந்தால் உடனடியாக உங்கள் பகுதி 2விதை ஆய்வாளருக்கு அல்லது விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண். 0462 2553017-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி போன்ற விதை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை இயக்குனர் உத்தரவின்படி மாவட்டந்தோறும் கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குனர், விதைச்சான்று உதவி இயக்குனர், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், விதை ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×