search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் பகுதியில் வேலை செய்யும்  வட மாநிலத்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு
    X

    பரமத்தி வேலூர் பகுதியில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு

    • கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .
    • அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரமத்தி, பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கந்தம்பாளையம், கபிலர்மலை, சோழசிராமணி, பாண்டமங்கலம், வெங்கரை, கொளக்கட்டுபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள், செங்கல் சேம்பர்கள், வெல்லஉற்பத்தி ஆலைகள் ,கிரானைட் மற்றும் டைல்ஸ் பதிக்கும் வேலை, மற்றும் பல்வேறு தொழில்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களுக்கு எதிரான செயல்கள் நடப்பது போன்ற தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சம் ஏற்பட்டு சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அவர்கள் பணியாற்றும் தொழில்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க மாநில இணை செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வதந்தி பரவி வருவதால் வெளி மாநிலத்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களை தேங்காய் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அழைத்து உங்களுக்கு முழு பாதுகாப்பு நாங்கள் அளிக்கிறோம். வதந்திங்களை நம்ப வேண்டாம் என எங்கள் சார்பாகவும் பரமத்திவேலூர் போலீசார்சார்பாகவும் நேரில் அழைத்து பேசினோம்.

    அதனால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதை தற்போது நிறுத்தி உள்ளனர். மேலும் இங்கிருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற வெளிமாநிலத்தினர் திரும்பி வருவது குறித்து அச்சத்தில் உள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வதந்திகளை நம்ப வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என தெரிவித்தோம்.

    மேலும் பரமத்தி வேலூர் தாலுகாவில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் வெளிமாநிலத்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பரமத்திவேலூர் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கூறும்போது, வெளி மாநில தொழிலாளர்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு காரணங்களை கூறி காலி செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும்.வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×