search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டம்
    X

    கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டம்

    • விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது.
    • இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் மானி யத்துடன் கூடிய தொழிற் கடனுதவி பெறுவதற்கு, மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பரிந் துரை செய்யப்படுகிறது. அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனை வோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம். முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம்.

    வங்கி கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்திட்டத் தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். 18 முதல் 55 வயது குட்பட்டோர், உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை. வாகனங்களை முதன்மை யாக கொண்டு செயல் படுத்தக்கூடிய தொழிழ்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக் லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், ஜே.சி.பி, அழகு நிலையம், ஆம்பு லன்ஸ் சேவை, உடற் பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கு வோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    சுயமுத லீட்டில் தொழில் தொடங்கி னாலும், இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம். மேலும், கடலூர் மாவட் டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரில் வந்து அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×