என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு
- திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த சரோஜா என்ற மூதாட்டியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
- மனநலம் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு முடி சுத்தம் செய்து குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, தொடர்ந்து மனநல சிகிச்சை அளித்து, நல்ல உணவளித்து வருகிறோம்.
திருத்துறைப்பூண்டி:
மகளிர் உதவி மைய அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் இவர்களின் ஆலோசனைப்படி திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே வீதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்த முகவரி சொல்ல தெரியாத 63 வயது மதிக்கத்தக்க சரோஜா என்ற மூதாட்டியை சமூக நலத்துறை ஓஎஸ்சி நிர்வாகி சுமிதா மற்றும் பணியாளர்கள், திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் உதவியுடன் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு சரிவர ஒத்துழைப்பு செய்ய மறுத்த சரோஜாவை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு கொண்டு வந்து மனநல சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிப்பதற்காக ஓ.எஸ்.சி நிர்வாகி சுமிதா, தலைமை காவலர் மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ராஜகணேஷ் ஆகியோர் சேர்த்தனர்.
நம்பிக்கை மனநல காப்பக சமூகப் பணியாளர் சுபா, பணியாளர்கள் சரவணன், கோகிலா, செவிலியர் சுதா ஆகியோர் அவரை ஆசுவாசப்படுத்தி குளிக்க வைத்து மனநல சிகிச்சைக்காக சேர்த்து க்கொண்டனர் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு முடி சுத்தம் செய்து குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, தொடர்ந்து மனநல சிகிச்சை அளித்து, நல்ல உணவளித்து வருகிறோம். சில நாட்கள் கழித்து அவரின் முகவரியை கண்டறிந்து கண்டுபிடித்து அவர்களது வீட்டாருடன் சேர்ப்போம் என்றார்.