search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி - உயர்நீதிமன்றம்
    X

    மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி - உயர்நீதிமன்றம்

    • போராட்டம் நடத்த வடசென்னை அதிமுக நிர்வாகி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
    • காலை 8 மணி முதல் 10 மணி வரை போராட்டம் நடத்தலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு எதிராக வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு உள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி புதிய வண்ணாரப்பேட்டையில் உள்ள டி.எச்.சாலையில் போரட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து வடசென்னை அதிமுக நிர்வாகி கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, காவல்துறை சார்பில் மனுதாரர் அனுமதி கேட்கும் இடத்தில் பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் போராட்டங்களுக்கு அனுமதியில்லை எனவும் தெரிவித்தார்.

    இதையடுத்து, மனுதாரர் கோரும் இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை என 30 நிமிடங்களுக்கு மட்டும் போராட்டம் நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×