என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் அ.தி.மு.க. கட்சி கொடி ஏற்று விழா
    X

    ஓசூரில் அ.தி.மு.க. கட்சி கொடி ஏற்று விழா

    • அ.தி.மு.க கட்சி கொடியேற்று விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
    • தண்ணீர் பந்தலையும் அவர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பொதுமக்களுக்கு குடிநீர், இளநீர், நுங்கு, பானகம், தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கினார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட ரெயில் நிலையம் அருகே, அ.தி.மு.க கட்சி கொடியேற்று விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் லட்சுமி ஹேமகுமார் தலைமை தாங்கினார். மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டு 62 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலையும் அவர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பொதுமக்களுக்கு குடிநீர், இளநீர், நுங்கு, பானகம், தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கினார்.

    மேலும் இதில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு, மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×