search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. வெளிநடப்பு
    X

    மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.

    சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. வெளிநடப்பு

    • சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் இன்று நடந்தது.
    • சேலம் மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் இன்று நடந்தது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். துணை மேயர் சாரதா தேவி, துணை ஆணையாளர் அசோக்குமார் மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் கவுன்சிலர் இமயவர்மன், சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளிநடப்பு செய்தார்.

    தொடர்ந்து பேசிய அ.தி.மு.க கவுன்சிலர் ஆணை வரதன், அண்ணா பூங்கா வில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும் தனது வார்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். மேலும் மண்டல அலுவலகம் எப்போது திறக்கப்படும்? என்று கேள்விகளை எழுப்பினார்.

    தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் குணா பேசுகையில், சேலம் மாநகராட்சியில் உள்ள சுடுகாடுகளுக்கு அதிக அளவில் பிணங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மயானங்களில் மின் தகன மேடை அமைக்க வேண்டும என்றார்.

    அ.தி.மு.க கவுன்சிலர் கே.சி.செல்வராஜ் பேசுகையில், மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. 3-வது முறையாக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் காரணம் என்ன?, புதிய பஸ் நிலையத்தில் தனி நபர்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளனர்.

    புதிய பஸ் நிலைய பகுதியில் காலியாக உள்ள இடம் தனியாருக்கு வாட கைக்கு கொடுக்கப்படு வது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

    தி.மு.க கவுன்சிலர் தெய்வலிங்கம் பேசுகையில், கூடுதல் வரி வசூலாகும் வார்டுகளில் அதிக நிதி ஒதுக்கீடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றார். தி.மு.க கவுன்சிலர் திருஞானம் பேசுகையில், பொன்னம்மா பேட்டை-அம்மாபேட்டை மெயின் ரோடு பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் வெளியூர் பஸ்களை பைபாஸ் சாலையில் இயக்க வேண்டும் என்றார்.

    எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த பல்வேறு தீர்மானங்களுக்கு விளக்கம் கேட்டார். தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து கவுன்சிலர்க ளின் கேள்விகளுக்கு அதி காரிகள் மூலம் பார்வை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.

    Next Story
    ×