search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
    X

    கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

    • தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது.

    இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதன்படி, இன்று டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் தி.மு.க. அரசை கண்டித்து அதிமுக அமைப்புச் செயலாளரும் திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கும்பகோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ராமநாதன் வரவேற்றார்.

    மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார், ஒன்றிய செயலாளர்கள் திருப்பனந்தாள் தெற்கு பாரதிமோகன், துணைச் செயலாளர்கள் தவமணி, இணை செயலாளர் இளமதி சுப்பிரமணியன், பொருளாளர் கண்ணபிரான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய செயலாளர்கள் திருவிடைமருதூர் வடக்கு அசோக்குமார், திருவிடைமருதூர் தெற்கு முத்துகிருஷ்ணன், திருப்பனந்தாள் வடக்கு கருணாநிதி, பாபநாசம் மேற்கு கோபிநாதன், பொற்றாமரை குளம் பகுதி செயலாளர் பத்ம. குமரேசன், மகாமககுளம் பகுதி செயலாளர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    மயிலாடுதுறை : இதைபோல் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

    நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் அபிராமி திடலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளரும், வேதராண்யம் எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், நாகை அ.தி.மு.க. நகர கழக செயலாளர் தங்க.கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    திருவாரூர்: இதைப்போல் திருவாரூர் ரெயில் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் கட்சி அமைப்பு செயலாளர் கோபால், சிவா, ராஜமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் போலீசார் செய்திருந்தனர்

    Next Story
    ×