என் மலர்
உள்ளூர் செய்திகள்
அட்மா திட்ட பயிற்சி
- வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
- இப்பயிற்சியில் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தகட்டூர் வருவாய் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் வேதாரண்யம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து வேதாரண்யம் வட்டார வேளாண்மை அலுவலர் யோகேஷ், வேளாண்மை உதவி அலுவலர்கள் இந்திரா, தமிழன்பன், அனீஷ்தோட்டக்கலைத் துறை சார்பாக தோட்டக்கலை உதவி அலுவலர் நிறைமதி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி கலந்துகொணடு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் .
வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார். இப்பயிற்சியில் பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.