search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தி திணிப்பை கண்டித்து நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
    X

    இந்தி திணிப்பை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்தபடம்.

    இந்தி திணிப்பை கண்டித்து நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

    • நெல்லை வக்கீல்கள் தமிழ் மன்றம் சார்பில் நீதிமன்றம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆந்திர மாநிலம் சுங்கச் சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், ஆந்திர மாநிலம் சுங்கச் சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெல்லை வக்கீல்கள் தமிழ் மன்றம் சார்பில் நீதிமன்றம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வக்கீல் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் சுதர்சன், செந்தில்குமார், அப்துல் ஜப்பார், ரமேஷ், இசக்கி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மத்திய உள்துறை அலுவல் மொழி தொடர் பான நாடாளுமன்ற குழு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டா யமாக இந்தி மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என பரிந்துரைத்து இருக்கிறது.

    இது தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக கொண்டு படித்து வரும் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பாக இருக்கும். எனவே இதனை திரும்ப பெற வழியுறுத்தியும், ஒரே பொதுத்தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம். எனவே இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றனர்.

    Next Story
    ×