search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டுகளுக்கு பிறகு  நெல்லை டவுனில் அரசு பொருட்காட்சி நாளை தொடங்குகிறது : சபாநாயகர்-அமைச்சர்கள் பங்கேற்பு
    X

    நாளை தொடங்க உள்ள பொருட்காட்சியின் முகப்பு தோற்றம்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை டவுனில் அரசு பொருட்காட்சி நாளை தொடங்குகிறது : சபாநாயகர்-அமைச்சர்கள் பங்கேற்பு

    • நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.
    • தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்ப டும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பொருட் காட்சி வ.உ.சிதம்ப ரனார் மணி மண்டபத்தின் அருகே நாளை நாளை (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.

    தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங் கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    சபாநாயகர் அப்பாவு பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார். விழாவில் செய்தித்துறை அமைச்சர்கள் சாமிநாதன், ராஜகண்ணப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். விழாவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ெஜயசீலன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    பொருட்காட்சியில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

    அரசு பொருட்காட்சி தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். அரசுத்துறை அரங்குகளில் தமிழக அரசின் சாதனைகளை பற்றியும், அரசின் நலத்திட்ட உதவிகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் துறை அலுவலர்கள் பொது மக்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

    பொதுமக்களின் வசதிக்காக நாளை முதல் நிறைவு நாள் வரை தினமும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த, பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை கண்டுகளித்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்டினங்கள் உள்ளன. பெண்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களின் அரங்குகள் மற்றும் சிற்றுண்டிகள் உள்ளன.

    Next Story
    ×