search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் விவசாய பட்டதாரிகள் அரசு நிதி  உதவியுடன் தொழில் தொடங்க அழைப்பு
    X

    ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் விவசாய பட்டதாரிகள் அரசு நிதி உதவியுடன் தொழில் தொடங்க அழைப்பு

    • அரசு மானியத்துடன் வேளாண்மை சார்ந்த புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அதற்கு மேலும் சமர்ப்பிக்கலாம்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் நாலுமாவடி, புறையூர், கருவேலம்பாடு, உடையார் குளம், மளவராயநத்தம், அழகப்பபுரம், குரங்கணி, புன்னக்காயல் ஆகிய பஞ்சாயத்துகளில் கலைஞ ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இக்கிராம பஞ்சாயத்து களில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட வேலையில்லா பட்டதாரி ஒருவருக்கு அரசு மானியத்துடன் வேளாண்மை சார்ந்த புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் கடன் உதவி பெற்று சுய தொழில்கள் தொடங்கலாம்.

    இதற்கு 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், மற்றும் வங்கியில் கடன் உதவி பெற்று திட்டம் தொடங்குபவர் அதற்குரிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பம் மற்றும் திட்ட அறிக்கை ஆகியவற்றை வேளாண்மை உதவி இயக்குனர் ஆழ்வார் திருநகரி அலுவலகத்தை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அதற்கு மேலும் சமர்ப்பிக்கலாம். அரசு நிதி உதவி 25 சதவீதம் மானியம் அல்லது ரூ.1 லட்சம் வரை மூலதன மானியம் வழங்கப்படும். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குனர் தென் திருப்பேரை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×