என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்ககிரியில் விவசாயம் செழிக்க வேண்டி கஞ்சி கலய ஆன்மீக ஊர்வலம்
Byமாலை மலர்15 Aug 2022 2:56 PM IST
- சங்ககிரி வழிபாட்டு மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான பெண்கள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து வந்தனர்.
- பின்னர் கலயத்திலிருந்த கஞ்சியை பெரிய பாத்திரத்தில் ஊற்றி, மக்களுக்கு வழங்கினர்.
சங்ககிரி:
சங்ககிரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், உலக அமைதி, மழைவளம், விவசாயம் செழிப்படைய, ஆடிப்பூர கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது. சங்ககிரி வழிபாட்டு மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான பெண்கள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து வந்தனர்.
ஊர்வலம் சங்ககிரி மலையடிவாரம் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து, சந்தைப்பேட்டை, புதிய எடப்பாடி சாலை வழியாக, ஊர்வலம் சென்று, பவானி சாலையில் உள்ள கோவிலை அடைந்தது. இதில், விழாப்பொறுப்பாளர் ராமசாமி உட்பட, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, சாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.
பின்னர் கலயத்திலிருந்த கஞ்சியை பெரிய பாத்திரத்தில் ஊற்றி, மக்களுக்கு வழங்கினர்.
Next Story
×