என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோவில்பட்டி புற்றுக்கோவிலில் அட்சய திருதியை சிறப்பு பூஜை கோவில்பட்டி புற்றுக்கோவிலில் அட்சய திருதியை சிறப்பு பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2023/04/22/1869874-1putrukovil.webp)
X
அட்சய திரிதியை சிறப்பு பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் அட்சய திருதியை சிறப்பு பூஜை
By
மாலை மலர்22 April 2023 1:48 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கோவில்பட்டி சங்கேரஸ்வரி அம்மன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பக்தர்கள் வாங்கி வந்த தங்க நகைகளை அம்மனிடம் வைத்து தீபாராதனை செய்து ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சங்கேரஸ்வரி அம்மன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், குங்குமம், பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இதில் பக்தர்கள் வாங்கி வந்த தங்க நகைகளை அம்மனிடம் வைத்து தீபாராதனை செய்து ஆசிர்வாதம் பெற்று சென்றனர். பக்தர்கள்
முககவசம் அணிந்து சமூக இடைவேளை கடைப்பிடித்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பாணகரம், நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
X