search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி பெரியசோலை சூழல் சுற்றுலா திட்டப்பணிக்கு ரூ.4.6 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    கோத்தகிரி பெரியசோலை சூழல் சுற்றுலா திட்டப்பணிக்கு ரூ.4.6 கோடி நிதி ஒதுக்கீடு

    • பெரிய சோலை வனப்பகுதியை இங்கிலாந்து அரசு பசுமை மாறா காடென அங்கீகரித்துள்ளது.
    • சதுப்பு நிலப் பகுதி ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரை சேமித்து வெளியேற்றும் தன்மை கொண்டதாகும்.

    ஊட்டி:

    உலக அளவில் பசுமை மாறா காடுகள் வரிசையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய சோலை வனப்பகுதியை இங்கிலாந்து அரசு பசுமை மாறா காடென அங்கீகரித்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் வனப்பகுதி நிறைந்த சுற்றுச்சூழல் பசுமை கொண்ட மாவட்ட மாகும். கோத்தகிரி நகர் பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் பாதுகாக்க ப்பட்ட வனப் பகுதியாக அறிவித்து வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு அரியவகை தாவரங்கள், பறவைகள், கருஞ்சிறுத்தைகள், வரிப்புலி, கேழையாடு, மலபார் அணில்கள், காட்டு மாடுகள், மற்றும் ஊர்வன உயிரினங்கள் வண்ண த்துப்பூச்சி இனங்கள் என வாழ்கின்ற வன உயிரின உய்விடமாகும். இங்குள்ள சதுப்பு நிலப் பகுதி ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரை சேமித்து வெளியேற்றும் தன்மை கொண்டதாகும்.

    இதனால் கோத்தகிரி சுற்றுப்பகுதிகள் தொடங்கி கோவை, ஈரோடு போன்ற சமவெளி பகுதிகளுக்கு தண்ணீரை வழங்கும் நீராதாரமாக விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த வனப்பகுதி இந்திய அளவில் பார்வையை பெற்றுள்ளது. மேலும் இந்த வனப் பகுதியில் கல்லூரி மாணவ -மாணவிகள் சூழல் சுற்றுலா படிப்புகள் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் இயற்கை ஆர்வலர்களுக்கும், சூழலியலாளர்களுக்கும் பயனுள்ள பகுதியாக இந்த வனப்பகுதி அமைந்துள்ளது. தமிழக அரசு கடந்த நிதியாண்டில் சூழல் சுற்றுலா திட்டம் என்னும் பெயரில் இதனை மேம்படுத்த தமிழக அரசு ரூ. 4.6 கோடி நிதி ஒதுக்கி அதற்கான கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது இங்குள்ள வன உயிரினங்களுக்கும், இயற்கை நீரோடைகளுக்கும் எவ்வித பாதிப்பும் வராத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் கவுதம், கோட்டாட்சியர் பூசணக்குமார், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி வெங்கடேஷ், கோத்தகிரி பேரூராட்சி செயலாளர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், வருவாய் வட்டாட்சியர் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வனத்துறை ஊழியர்களும் பங்கேற்றனர். நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களில் கோத்தகிரி பகுதியில் உள்ள லாங்வுட் என்ற பெரிய சோலை தமிழக அளவில் தனி கவனம் பெற்றுள்ளது.

    Next Story
    ×