என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
- புதிதாக மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- ஒரு புதிய நூலக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பில் இயக்கப்படும்.
கோவை,
கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
கோவை மாநகராட்சி கவுன்சிலர்களிடம் அவரவர் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும், மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள புதிதாக மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உறுப்பினருக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ப்படும்.
கோவை மாநகராட்சயில் 17 மேல் நிலைப்பள்ளிகள், 10 உயர் நிலைப்பள்ளிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கு என ரூ.50 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படும்.
மாநகராட்சி மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு கருவி ரூ.1 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நவீன சுத்திகரிப்பு கருவிகளை ரூ.20 லட்சம் செலவில் வருகிற கல்வியாண்டில் பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
பொது அறிவை மேம்படுத்தவும், வசதியற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டில் ஒரு பிரத்யேக மக்களை தேடி நூலகம் இயக்கப்பட்டு இதுவரை 4800 மாணவர்கள் மற்றும் 440 பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.
இது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த நிதியாண்டில் கூடுதலாக ஒரு புதிய நூலக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பில் இயக்கப்படும்.
மாநகராட்சி பள்ளிகளில் 12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவர்களில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதேபோல மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற செய்யும் வகுப்பின் ஆசிரியர்களுக்கும் ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்படும்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களின் போதும், மேயரின் கள ஆய்வின் போதும் பொதுமக்களை கூறப்படும் குறைகளை சரி செய்யும் விதமாக மாண்புமிகு மேயர் விருப்ப நிதி இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் இடம் பெற்றுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்