search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெடுஞ்சாலை விரிவாக்க பணி காரணமாக முஸ்லீம்களுக்கு மாற்று மயான இடம் ஒதுக்கீடு
    X

    நெடுஞ்சாலை விரிவாக்க பணி காரணமாக முஸ்லீம்களுக்கு மாற்று மயான இடம் ஒதுக்கீடு

    • பெரியநாயக்க ன்பாளையம் பகுதியில் கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நடைபாதை அமைக்கப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் பகுதியில் கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் இரு புறமும் சாலை விரிவாக்கம் சர்வீஸ் ரோடு அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரிய நாயக்க ன்பாளையம் சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் உள்ள 15 செண்ட் பூமியை எடுக்க நெடுஞ்சாலை துறை அளவீடு செய்துள்ளது. பள்ளி வாசலை 800 குடும்பங்கள் தொழுகைக்காகவும் அடக்கம் செய்யவும் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூடலூர் நகராட்சி பகுதியில் இடஒதுக்கீடு செய்து தருமாறு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதன் பேரில் சிறப்பு நகரசபை கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. நகரசபை தலைவர் அறிவரசு தலைமையில் நடந்த கூட்டத்தில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்குப்பாளையம் பிரிவிற்கு தெற்கே மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்துக்கள் மயானத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இடத்தை ஒதுக்கீடு செய்து முஸ்லீம் மக்கள் அடக்கத்திற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகராட்சி துணைத்தலைவர் ரதிராஜேந்திரன் உட்பட கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான ஆணை யை சுன்னத் ஜமாத் செயலர் அப்துல் ரகுமான், பொருளாளர் இப்ராஹீம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இது குறித்து தலைவர் அறிவரசு கூறுகையில் அப்பகுதியில் சுகாதாரம் மேம்படுத்தப்படும் நடைபாதை அமைக்கப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்துக்கள், முஸ்லீம்களுக்கு அருகருகே மயானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×