என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரேஷன் ஊழியர் சங்க தலைவரை கொல்ல முயற்சிகூலிப்படைத் தலைவன் கைது: 5 பேருக்கு போலீசார் வலை
- சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
- இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது. இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெயசந்திர ராஜா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரை கொல்ல முயற்சி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும், கூலிப்படைத் தலைவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் கூலிப்படைத் தலைவன் கும்பகோணம் தமூம் அன்சாரி (24) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது. இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெயசந்திர ராஜா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவரை கொல்ல முயற்சி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும், கூலிப்படைத் தலைவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கூலிப்படைத் தலைவன் கும்பகோணம் தமூம் அன்சாரி (24) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்