search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் ஆக்கி சாம்பியன் ஷிப் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
    X

    ஹீரோ ஆசிய ஆண்கள் சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டிக்கான கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ராஜா எம்.எல்.ஏ. கோப்பையை அறிமுகப்படுத்திய காட்சி.

    சங்கரன்கோவிலில் ஆக்கி சாம்பியன் ஷிப் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

    • ஸ்ரீகோமதி அம்பாள் பள்ளி வளாகத்தில் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை சுற்றுப்பயண விழா நடந்தது.
    • நிகழ்ச்சியையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலகம் சார்பில் சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சென்னையில் நடைபெற உள்ள 7-வது ஹீரோ ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை (பாஸ் தி பால்) சுற்றுப்பயண விழா நடந்தது.

    கலெக்டர் ரவிச்சந்திரன்

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு வரவேற்றார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., பாஸ் தி பால் நிகழ்வு மற்றும் கோப்பையினை அறிமுகப்படுத்தி பேசினார்.

    உற்சாக வரவேற்பு

    பின்னர் தனுஷ்குமார் எம்.பி., சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ.., தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், ஆக்கி யூனிட் ஆப் தென்காசி அமைப்பின் தலைவர் கல்யாணி சுந்தரம் மற்றும் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வந்த கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மாணவரணி உதயகுமார், அப்பாஸ் அலி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், அன்சாரி, வீராசாமி, ராமர், ரகுமான் விளையாட்டு மேம்பாட்டு அணி மகாராஜன், தகவல் தொழில் நுட்ப அணி சிவாஜி மற்றும் சதாசிவம், காவல்கிளி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆக்கி யூனிட் ஆப் தென்காசி அமைப்பின் செயலாளர் பால்மகேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×