search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தொழிலாளியாக இருந்து கொள்ளை கும்பல் தலைவனாக மாறிய முதியவர்
    X

    கோவையில் தொழிலாளியாக இருந்து கொள்ளை கும்பல் தலைவனாக மாறிய முதியவர்

    • கோவை டி.கே.மார்க்கெட்டில் தொடர் ெகாள்ளை சம்பவம் அரங்கேறியது
    • கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தொழிலாளியின் மண்டையை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கோவை,

    தூத்துக்குடியை சேர்ந்தவர் மணி (35). இவர் கோவை டி.கே மார்க்கெட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று இரவு மணி கடையில் தூங்கி கொண்டிருந்தார்.அப்போது மர்மநபர்கள் 3 பேர் கடைக்குள் புகுந்து பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்தனர்.

    இதை பார்த்த மணி அவர்களை பிடிக்க முயற்சித்தார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் மணியின் மண்டையை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக மணி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்த பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் ெகாள்ளை சம்பவங்கள் நடப்பதாக வியாபாரிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, போலீ–ஸ்காரர்கள் கார்த்தி, பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சாதாரண உடையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் டி.கே. மார்க்கெட்டில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    சம்பவத்தன்றும் தனிப்படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கடையில் 3 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து கொண்டு இருந்தனர்.

    உடனடியாக போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று, 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ரபீக் (வயது 50), ஈரோட்டை சேர்ந்த முத்துகுமார் மற்றும் கோகுல் என்பதும், இவர்கள் 3 பேரும் டி.கே. மார்க்கெட்டில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த கும்பலுக்கு ரபீக் தலைவனாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. ரபீக் கடந்த சில வருட–ங்களுக்கு முன்பு கோவை டி.கே மார்கெட்டில் கூலி வேலை பார்த்துள்ளார்.

    ஆனால் அதில் அவருக்கு போதுமான வருமானம் கிடைக்காததால், கஞ்சா விற்க தொடங்கி உள்ளார். கஞ்சா வழக்கில் ரபீக் கைது செய்ய ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார். அப்போது அவருக்கு, ஈரோட்டை சேர்ந்த முத்துகுமார் மற்றும் கோகுல் என்பவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடுவது மற்றும் பூட்டு உடைப்பதில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.

    ரபீக் அவர்களுடன் நண்பராகி உள்ளார். அப்போது, அவர்களிடம், நீங்கள் மோட்டார் சைக்கிள் திருடுவதில் அதிகளவு சிரமம் உள்ளது. நாம் 3பேரும் சேர்ந்து கடைகளில் கொள்ளையடிக்கலாம் என கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் எங்கு போய் அடிப்பது என்று கேட்டதற்கு, ரபீக் நான் டி.கே. மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளேன். அங்கு ஏராளமான கடைகள் உள்ளன. அங்ககு பணமும் அதிகளவில் இருக்கும். நாம் அங்கு சென்று கொள்ளையடித்து ஜாலியாக வாழலாம் என கூறியுள்ளார்.

    அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். உடனே ரபீக் நான் முதலில் வெளியில் சென்று நீங்கள் தங்குவதற்கு இடம் மற்றும் கொள்ளையடிக்கும் திட்டத்தை தயார் படுத்தி வைக்கிறேன். நீங்கள் வந்த பின்னர் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்கலாம் என கூறியுள்ளார்.

    அதன்படியே வெளியில் வந்த ரபீக் நேராக கேரளாவில் தனது மகன் வேலை பார்க்கும் ரப்பர் தோட்டத்தில் வீடு பார்த்தார்.

    இவர் விடுதலையான சில தினங்களில் கோகுலும், முத்துக்குமாரும் விடுதலையானார்கள். வெளியில் வந்த அவர்கள் 2 பேரும், ஈரோட்டில் மோட்டார் சைக்கிளை திருடி விட்டு நேராக அட்டப்பாடி வந்தனர்.

    அவர்களை ரபீக் தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அப்போது புத்தாண்டை இங்கு கொண்டாடி விட்டு, அதற்கு மறுநாள் சென்று கொள்ளையடிக்கலாம் என 3 பேரும் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி கேரளாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு மறுநாள் கோவை வந்து டி.கே.மார்க்கெட்டில் பொருட்கள் மற்றும் பணத்தை எடுத்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதேபோல் டி.கே.மார்க்கெட்டில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த குனியமுத்தூரை சேர்ந்த அரவிந்த் (32), விமல்ராஜ் (25) என்பவர்களையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் வியாபாரிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×