என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடும் குளிரில் தவித்த மூதாட்டி மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு
    X

    மூதாட்டி மீட்கப்பட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் ஒப்படைக்கபட்டார்.

    கடும் குளிரில் தவித்த மூதாட்டி மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு

    • பஸ் நிலையத்தில் கடும் குளிரிலும், மழையிலும் ஒரு வயதான மூதாட்டி தவித்து வந்தார்.
    • மூதாட்டிக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் காட்டூர் பஸ் நிலையத்தில் கடும் குளிரிலும், மழையிலும் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் தவித்து வந்தார்.

    இது பற்றி காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகர் அளித்த தகவலின் படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் அறிவுரையின் பேரில் மாவட்ட குழந்தைகள் குற்ற பாதுகாப்பு காவல் ஆய்வாளர் கண்ணகி, தலைமை காவலர் சத்யா, ஓ. எஸ். சி. நிர்வாகி சுமிதா, மெர்லின், சமூகப் பணியாளர்கள் கீர்த்தி, ஆகாஷ், வினோத் ஆகியோர்கள் உதவியுடன் மூதாட்டி மீட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கு உதவி செய்த பாரதி தொண்டு நிறுவன இயக்குனர் நாகராஜன், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் கூறினார்.

    அப்போது உடன் காப்பக செவிலியர் சுதா, ஒருங்கிணைப்பாளர் சரவணன், உதவியாளர் சங்கர் ஆகியோர் இருந்தனர்.

    Next Story
    ×