என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புழல் அருகே ஆந்திரா அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது: 30 பயணிகள் உயிர் தப்பினர்
ByMaalaimalar11 Aug 2023 12:21 PM IST
- சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது.
- டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மாதவரம்:
ஆந்திராவில் இருந்து மாதவரம் பஸ் நிலையம் நோக்கி நேற்று மாலை ஆந்திரா அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30 பயணிகன் இருந்தனர். புழல், சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் வந்தபோது பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.
பஸ்சில் இருந்து புகை வந்ததும் பயணிகளை டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Next Story
×