search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
    X

    கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

    • கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • சிறந்த கால்நடைகளின் உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. இதில் சிறந்த கால்நடை உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் தனசேகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவராஜவள்ளி, செயற்கை முறை கருவூட்டாளர் ஸ்ரீகுமார், தம்பிராஜா மற்றும் கால் நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×