search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னதான திட்டம் 3-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    விழாவில் அன்னதான திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்.

    அன்னதான திட்டம் 3-ம் ஆண்டு தொடக்க விழா

    • கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம், குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.
    • அரசு மருத்துவமனையிலுள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர்.

    தஞ்சாவூர்:

    புனித அன்னை தெரசாவின் அன்பு வழியைப் பின்பற்றி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002ஆம் ஆண்டு முதல் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது.

    மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கொரோனா நோய் தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள், மளிகை சாமான்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் இதர நோய்களினால் பாதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தினமும் பசியால் வாடுவதை கண்டு அவர்களுக்கு அன்னை தெரசா அமுதசுரபி அன்னதான திட்டத்தின் மூலம் இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது .

    இத்திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இத்தொடர் திட்டத்தை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடக்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு இடைவிடாமல் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இலவசமாக அன்னதானம் வழங்கிவரும் பவுண்டேசன் பணியினை பெரிதும் பாராட்டினார்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (பொ) மருதுதுரை முன்னிலை வகித்தார். மதர் தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து தலைமை தாங்கினார்.

    பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு நாள் கூட தவறாமல் தினந்தோறும் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டதின் மூலம் தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம். கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புதினா சாதம், தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம் மற்றும் குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அன்பு இல்லம், தஞ்சை நகர் பகுதிகள், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அன்ன தானம் வழங்கப்ப டுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், சாலை ஓரங்களில் வசிப்ப வர்கள், நோயுற்றவர்கள், முதியவர்கள், கூலித்தொ ழிலாளர்கள், அரசு மருத்துவ மனையிலு ள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் ஆகியோர் பயனடைகின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேசன் அறங்காவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, ரேணுகா மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மகேஷ்வரன், சூசைராஜா, கிறிஸ்டி, வர்ஷினி, ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×