என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீண்டும்  ஆய்வு
    X

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

    • செட்டிச்சாவடி அருகே குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது.
    • பூங்காவில் பணிகளை செய்யாமல் செய்து முடித்ததாக க ணக்கு காட்டி பல லட்சம் பணத்தை அதிகாரிகள் சுருட்டியதாக புகார்கள் எழுந்தது.

    சேலம்:

    சேலம் செட்டிச்சாவடி அருகே குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் சுற்றுலா வந்து செல்கிறார்கள்.

    இந்தநிலையில் பூங்காவில் பணிகளை செய்யாமல் செய்து முடித்ததாக க ணக்கு காட்டி பல லட்சம் பணத்தை அதிகாரிகள் சுருட்டியதாக புகார்கள் எழுந்தது . மேலும் வனத்துறை அதிகாரிகள் மீதும் பல்வேறு லஞ்ச புகார்கள் சென்றன. இதையடுத்து இந்த புகார்கள்குறித்து விசாரணை நடத்த வனத்துறை லஞ்ச ஒழிப்பு துறை மேலதிகாரிகள் குழுவினர் சென்னையில் இருந்து சேலத்திற்கு இன்று காலை வந்தனர்.

    இதில் ஒரு குழுவினர் கருமந்துறை வனத்துறை அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். . மகேந்திரன் தலைைமயில் மற்றொரு குழுவினர் சேலம் உயிரியல் பூங்காவுக்கு சென்றுள்ளனர. அந்த குழுவினர் தொடர்ந்து அங்கு ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வுமுடிவில் இதில் தொடர்புடைய அதிகரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×