search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வாழப்பாடியில் கலால் துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    வாழப்பாடியில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    வாழப்பாடியில் கலால் துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    • சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மாவட்ட கலால் துறை சார்பில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது.
    • அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சார்பாக, நாடகக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு, சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமை யானவர்களை மீட்டு நல்வழிப்படுத்தி, அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சார்பாக, நாடகக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி பஸ் நிலை யம் அருகே, சேலம் வட்டாட்சியர் (கலால்) ரவிச்சந்திரன் தலைமையில், கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது.

    கிராமிய பாடல்கள் பாடியும், நடனமாடியும், சிறு நாடகம் நடத்தியும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள், குடிப்பழக்கத்தினால் சமூக மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், உயிரிழப்புகள், பொருளா தார பாதிப்புகள் குறித்து கிராமிய கலைஞர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பிர சாரத்தில், காலால் வருவாய் ஆய்வாளர் ஹன்சாரி கான், வாழப்பாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக், வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×