search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 2 கி.மீ. தூரம் சங்கிலி போல் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து அணிவகுத்து நின்றனர்.
    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 2 கி.மீ. தூரம் சங்கிலி போல் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து அணிவகுத்து நின்றனர். அவர்களுடன் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் கைகளை கோர்த்து நின்றார். மேலும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதேபோல் மாணவர்க ளும் போதைப் பொரு ளுக்கு எதிரான வாசக ங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தியவாறுநின்று விழிப்புணர்வு ஏற்படு த்தினர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×