என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கு கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பாடத்தில் பட்ட படிப்பு மற்றும் குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.
28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.
தொடர்புடைய வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும்.
பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வருகிற 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, இணை இயக்குனர் / திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூர் -613010.மேற்குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையிலான காலி பணியிடங்களுக்கு மாவட்ட தேர்வு குழு வாயிலாக எழுத்துத் தேர்வு 75 மதிப்பெண்களுக்கும் மற்றும் நேர்முகத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும்.
எழுத்து தேர்வில் 45 மதிப்பெண்கள் ( 75 மதிப்பெண்களுக்கு 60 விழுக்காடு ) பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலில் இடம் பெறுவார்கள். உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.