என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் நடக்கும் இலவச திருமணத்திற்கு வருகிற 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு
- தமிழக அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
- இதற்கான திருமண ஜோடிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் அடுத்த மாதம் 23-ந்தேதி நடக்கும் இலவச திருமணத்திற்கு வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலவச திருமணம்
இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இலவச திருமணத்திற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
இதையடுத்து ஒரு திருமண ஜோடிக்கு ரூ. 20 ஆயிரம் செலவிடப்படுகிறது. அதாவது திருமாங்கல்ய வகைக்கு 2 கிராம் தங்கம் ரூ. 10 ஆயிரம், மணமகன் ஆடை ரூ. 1000, மணமகள் ஆடை ரூ. 2 ஆயிரம், மணமக்கள் வீட்டார்களுக்கு 20 நபர்களுக்கு உணவு வகைக்கு ரூ. 2 ஆயிரம், திருமண மாலை மற்றும் புஷ்பம் ரூ. 1000, பாத்திரங்கள் வகைக்கு ரூ. 3 ஆயிரம், எதிர்பாராத செலவு ரூ. 1000 என மொத்தம் ரூ. 20 ஆயிரம் செலவிடப்பட உள்ளது.
3-ந்தேதிக்குள்....
இத்திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான திருமண ஜோடிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.