search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூரில் மாமன்னன் ராசராசன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
    X

    பேராசிரியர் ஜெயபால், அகத்திய சன்மார்க்க சங்க செயலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்கு மாமன்னன் ராசராசன் விருது வாங்கியதற்காக செங்கோல் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூரில் மாமன்னன் ராசராசன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

    • விழாவிற்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
    • தஞ்சை மைய அமைப்பாளர் உமாமகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் நடை பெற்ற 1037-ம் ஆண்டு சதயவிழாவில் மாமன்னன் ராசராசன் விருது தஞ்சை மைய பேராசிரியர் ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் மற்றும் தஞ்சை அகத்திய சன்மார்க்க சங்க செயலர் சிவ. அமிர்தலிங்கத்திற்கு வழங்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மாமன்னன் ராசராசன் விருது பெற்றவர்களுக்கு இன்று தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் பாராட்டு விழா நடை பெற்றது.

    விழாவிற்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.தஞ்சை பூண்டி கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் ராஜேஸ்வரி வாழ்த்தி பேசினார். தஞ்சை மைய அமைப்பாளர் உமாமகேஸ்வரி அனை வரையும் வரவேற்றார்.

    விழாவில் முடிவில் தஞ்சாவூர் சோழன் லேப் செல்வராஜன் நன்றி கூறினார்.பாராட்டு விழாவை தொடர்ந்து இந்த அரங்கில் சைவ சித்தாந்த வகுப்பு திருக்குறளில் சைவ சித்தாந்தம் எனும் தலைப்பில் நடைபெறுகிறது.

    Next Story
    ×