என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குண்டு எரிதல் போட்டியில் தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்த தூத்துக்குடி மாணவிக்கு பாராட்டு
- மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அகில இந்திய அளவிலான குண்டு எரிதல் போட்டி நடைபெற்றது.
- தமிழகம் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த ப்ரித்தி சிவா பிச்சம்மாள் என்ற கல்லூரி மாணவி கலந்து கொண்டு 3-ம் இடம் பிடித்தார்.
தூத்துக்குடி:
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்கான அகில இந்திய அளவிலான குண்டு எரிதல் போட்டி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த ப்ரித்தி சிவா பிச்சம்மாள் என்ற கல்லூரி மாணவி கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் அவர் இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்தார். பரிசு, சான்றிதழ்களுடன் சொந்த ஊர் திரும்பிய ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்ச்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் சார்பாக மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தை சேர்ந்த சேகர், பழனி வேல், துரைசிங்கம், செல்லத்துரை,ஜெகன், மணி குட்டி, பிரபாகர்,சண்முகம் உள்ளிட்ட பலர் மாணவி ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.