search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டவருக்கு பாராட்டு
    X

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வனை, கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டினார்.

    விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டவருக்கு பாராட்டு

    • மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பாடல் பாடியுள்ளார்.
    • பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    வேதாரண்யம்:

    பொதுசுகாதார த்துறை நூற்றாண்டு நிறைவ டைவதை தமிழகம் முழுவதும் அத் துறையினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில்தலை ஞாயிறு ஆரம்பசுகாதார நிலையத்தில்வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக பணியாற்றும் நாகை செல்வன் சமீபத்தில் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்தில் வரும் பொதுவாக எம் மனசு தங்கம் பாடல் வரிகளை மாற்றி அமைத்து பொது சுகாதாரத் துறையின் சேவைகளையும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றியும் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் .

    அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்பாடலை சிறப்பாக பாடியத்தற்காக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை செல்வனை பாராட்டினார்.

    Next Story
    ×