என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சீனிவாசன், மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தொடங்தி வைத்த போது எடுத்த படம்.
வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாடுங்கள்- நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் வேண்டுகோள்
- விழிப்புணர்வு பேரணி நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் நடைபெற்றது.
- கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன் வரவேற்புரையாற்றினார்.
நெல்லை:
தமிழ்நாட்டில் சமரச மையம் ஆரம்பிக்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறை வடைந்ததையொட்டி பொது மக்கள் சமரச மையத்தின் மூலம் வழக்குகளை விரைவாக சமரசமாக முடிப்பது பற்றிய சமரச தின விழிப்புணர்வு துண்டு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் நடைபெற்றது.
விழாவில் சமரசம் குறித்த சமரச தின விழிப்புணர்வு துண்டு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் மற்றும் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் பேசுகையில், சமரசம் என்பது வழக்கு தரப்பினர்கள் தங்களது முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வு காணக்கூடியது எளிய வழி. சமரசத்தின் போது வழக்கு தரப்பினர்கள் தங்கள் உள் மனம் திறந்து பேசி தங்கள் வழக்கினை விரைவாக நீதிமன்றங்கள் முடித்து வைக்க வழிவகை செய்கிறது. எனவே பொது மக்கள் தங்கள் வழக்குகளை சமரச மையத்தில் உள்ள பயிற்சிப்பெற்ற சமரச கர்கள் முன்னிலையில் பேசி நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளை விரைவாக முடிக்க சமரச மையத்தை நாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். விழாவில் 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 3-வது கூடுதல் நீதிபதி பன்னீர் செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி விஜயகுமார், சிறப்பு போக்சோ வழக்குகள் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, நெல்லை தலைமை நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, சிறப்பு ஊழல் தடுப்பு வழக்கு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம் மற்றும் உரிமையியல் நீதிபதிகள் சுப்பையா, வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி மனோஜ்குமார் நன்றி கூறினார். இந்த விழா விற்கான ஏற்பாடுகளை சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான இசக்கி யப்பன் செய்தி ருந்தார்.






