என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சத்தியமூர்த்தி பவனில் தாக்குதல்: கே.எஸ்.அழகிரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகிகள் பேட்டி
- நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்சன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலைக் கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
- நாங்குநேரி வட்டாரத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தாமலேயே மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்ட தலைவர் மூலம் புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
மூலக்கரைப்பட்டி:
நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்சன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலைக் கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
நாங்குநேரி வட்டாரத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தாமலேயே மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்ட தலைவர் மூலம் புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை கேட்பதற்காக நாங்கள் 50 பேர் வாகனத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றிருந்தோம். நாங்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அழைப்பின் பேரில் செல்லவில்லை, அங்கு அவரை சந்தித்து பேசவும் இல்லை. சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவரை சந்தித்து பேச நேரம் கேட்டோம். 4 மணி நேரம் காக்க வைத்து விட்டு மாநிலத் தலைவர் சந்திக்காமலேயே புறப்பட்டு சென்றார்.
அப்போது அங்கு இருந்த அவருடைய ஆதரவாளர்கள் எங்களை அரிவாள், கம்பு மூலம் தாக்குதல் நடத்தினார்கள். நாங்கள் எங்கு போவது என்று சிதறி ஓடினோம். அவர்களது செயல் வேலியே பயிரை மேயும் நிலை அங்கு ஏற்பட்டது. நாங்கள் 40 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறோம். தற்போது மாநில தலைவருடைய செயல்பாடுகளால் மிகுந்த அதிருப்தியில் உள்ளோம். உடனடியாக கட்சி தலைமை மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.
அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், சுப்பிர மணியன், வேல்முருகன், மாரிமுத்து, மயில் ராஜா, வின்சன், சுப்பிரமணி, ஆதவ், தாமோதரன், ஊசி காட்டான், வன்னி நாச்சி யார், மாடசாமி செட்டியார், ருக்மணி யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்