என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அரசர் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா அரசர் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா](https://media.maalaimalar.com/h-upload/2022/10/11/1775154-14.jpg)
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.
அரசர் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரசர் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
- தொல்காப்பியப் பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றுகளும் வழங்கப்பட்டன.
திருவையாறு:
திருவையாறு அரசர்க் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
தஞ்சாவூர் நாகம்மாள் ஆறுமுகம் கல்விக் குழுமமும், திருவையாறு அரசர் கல்லூரியும் இணைந்து நடத்திய தொல்காப்பிய விழாவில் தொல்காப்பியப்பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றுகளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் தஞ்சாவூர் நாகம்மாள் ஆறுமுகம் கல்விக் குழுமம் நிர்வாகி மல்லிகா மகாலிங்கம் மற்றும் முனைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அம்மன்பேட்டை குப்பு. வீரமணி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.
முன்னாள் அரசர் கல்லூரி பேராசிரியர் முனைவர் திருஞானசம்மந்தம் வாழ்த்துரை நல்கினார்.
விழா நிறைவில் திருவையாறு அரசர்க்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ரஜினி தேவி நன்றி தெரிவித்தார்.