என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுரங்கம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் ஒத்தி வைப்பு
- பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் சிமெண்டு ஆலை சுரங்கம் அமைக்கும் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது
- அரியலூர் கலெக்டர் உத்தரவு
அரியலூர்,
அரியலூர்அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சிமென்ட்ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான சுண்ணாம்புக் கல் எடுக்க வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, காட்டுப்பிரிங்கியம், அஸ்தினாபுரம், கல்லங்குறிச்சி, சீனிவா சபுரம், தாமரை க்குளம், நாயக்கர்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் குறை வான விலைக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அப்போது நிலம் அளித்த விவசாய குடும்பத்தின் ஒரு வருக்கு வேலை வழங்கப்ப டும் என்று தெரிவித்த அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை என கூறப்ப டுகிறது.இது தொடர்பாக சம்பந் தப்பட்ட கிராமமக்கள் கோர்ட்டில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுரங்கம் அமைப்பதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.அப்போது ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில், நிலம் கொடுத்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.
இதனை அறிந்த கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கிவிட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கருத்துக் கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்து கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பேச்சுவார்த்தையின் போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், அரசு சிமென்ட் ஆலை நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்