என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
- பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது
- காவல் துறையினர் சார்பில் நடந்தது
அரியலூர்:
அரியலூர் அடுத்த மணக்குடி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான காவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும், அவசரகால உதவி எண்கள் 100,1098, 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story






