என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல்
- லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டன
- டிரைவர், உதவியாளர் கைது
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று மாலை போலீஸ்காரர் ராஜூ என்பவர் பணியில் இருந்தார். அப்போது கும்பகோணம் பகுதியை நோக்கி சென்ற ஒரு லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் கேரளாவில் இருந்து காபி கொட்டை தோலை ஏற்றிக்கொண்டு, கும்பகோணம் பகுதிக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீஸ்காரர் ராஜூ லாரியை சோதனை செய்தபோது, காபி கொட்டை தோல் மூட்டைகளுக்கு கீழே சாக்கு மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தார்.
உடனடியாக இது பற்றி தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். லாரியில் இருந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சோதனைச்சாவடியில் போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலோ மாவட்டம் சாய்ராம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் பகிரத்சிங்(வயது 24), அதே மாவட்டத்தில் உள்ள ஒட்டாவாலா கிராமத்தை சேர்ந்த சோப்பாராம்(22) ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரித்தபோது கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள அத்திப்பள்ளி என்னும் இடத்தில் இருந்து இந்த லாரியை அவர்கள் கும்பகோணத்தில் உள்ள ஒரு நபரின் இடத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். கும்பகோணத்தில் யாருக்கு இந்த குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் குட்கா பொருட்கள் சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் குட்கா பொருட்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு 3 முதல் 4 மடங்கு லாபத்துடன் விற்பனை செய்வதற்காக குட்கா பொருட்கள் கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரியில் இருந்து 82 மூட்டைகள் குட்கா கைப்பற்றப்பட்டது. அவை சுமார் 2 டன் எடை இருக்கும் என்றும், அதன் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிடிபட்ட குட்கா பொருட்கள் தா.பழூர் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் முன்னிலையில் குட்கா மூட்டைகள் எடுத்து பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது.
மேலும் டிரைவர்கள் பகிரத்சிங் மற்றும் சோப்பாராம் ஆகியோரை கைது செய்து, போலீஸ் நிலையம் கொண்டு வந்து, அவர்களிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்