என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமூக நீதி நாள் அனுசரிப்பு
- அரியலூர் அரசு கல்லூரிகளில் சமூக நீதி நாள் அனுசரிக்கப்பட்டது
- சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்
அரியலூர்,
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முன்னதாக இந்த சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது.அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து, சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வெ.கருணாகரன், மேரி வைலட் கிருஸ்டி ஆகியோர் செய்திருந்தனர்.இதே போல் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில், முதல்வர் ரமேஷ் தலைமையில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.