என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம்
- ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
- சுற்றறிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.
அரியலூர் :
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், உறுப்பின ர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவி செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், மேலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் சாலை , குடிநீர் , கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் தங்களது பகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
மேலும் இக்கூட்டத்தில், ஊராட்சிகளில் எந்தவொரு நிதியிலிருந்தும் உயர்கோபுரம் மின் விளக்குகள், சிறுமின்கோபுர விளக்குகள், ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்திட மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்படுகிறது என்றும், சோலார், எல்.இ.டி விளக்குகள், கம்பங்களுடன் கொள்முதல் செய்தல் உடனடியாக தடைசெய்யப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககம், இயக்குநர் பிரவீன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.






