search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அரியலூர் மாவட்ட கோவில்களில் பல்வேறு திட்டங்கள்
    X

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அரியலூர் மாவட்ட கோவில்களில் பல்வேறு திட்டங்கள்

    • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அரியலூர் மாவட்ட கோவில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது
    • திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அரியலூர் மாவட்டத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 186 திருக்கோவில்களில் பணிபுரியும் 186 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதுடன் திருக்கோவில் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ஓய்வூபெற்ற இசைக் கலைஞர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் 24 நபர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.72,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், திருக்கோவில் புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 42 திருக்கோவில்களில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளும், திருக்கோவில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இதே போன்று திருக்கோவில் பணியாளர்களுக்கு 2 சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவில்களில் பணிபுரியும் 26 ஆண் பணியாளர்கள் மற்றும் ஒரு பெண் பணியாளர் என மொத்தம் 27 பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தற்பொழுது முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இத்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.மேலும் ஏழை, எளிய இணைகளுக்கு இலவச திருமண திட்டமும் செயல்படுத்த பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருமணம் நடைபெற்ற 3 இணைகளுக்கும் திருமண நாளன்று ஒவ்வொருவருக்கும் தலா திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டு நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்சி, பூஜைப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.இதில் ஒவ்வொரு இணைகளுக்கும் தலா ரூ.50,000 மதிப்பில் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×