search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அதிநவீன தொலைநோக்கி கருவி மூலம் சந்திர கிரகணத்தை பார்க்க ஏற்பாடு
    X

    நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வைக்கப்பட்டுள்ள அதிநவீன தொலைநோக்கி கருவியை ராயகிரி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்ட போது எடுத்த படம்.

    நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அதிநவீன தொலைநோக்கி கருவி மூலம் சந்திர கிரகணத்தை பார்க்க ஏற்பாடு

    • சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.22 மணி வரை நிகழ்கிறது.
    • நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சந்திர கிரகணத்தை காண அதிநவீன தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    2023-ம் ஆண்டிற்கான பகுதி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.22 மணி வரை நிகழ்கிறது. அந்த நிகழ்வை காண்பதற்காக நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அதிநவீன தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம். குமார் தெரிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய கல்வி அதிகாரி மாரி லெனின் செய்திருந்தார். நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவி கள் அழைத்து வரப்பட்டு பார்வையிட்டனர். ராயகிரி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாணவர்கள் வந்து தொலைநோக்கியை பார்வையிட்டனர்.

    Next Story
    ×