search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா
    X

    கோவை கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா

    • 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 36 வகை போட்டிகள் நடைபெற்றது.
    • கட்டுரை, ஓவியம், கதைகூறுதல், பேச்சு, நடனம், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    கோவை,

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கலைத்திருவிழா நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவை கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் கலைத்திருவிழா நடைபெற்றது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 36 வகை போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலைத்திறன், கட்டுரை, ஓவியம், கதைகூறுதல், பேச்சு, நடனம், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    இந்த பள்ளியில் நடந்த கலைத்திருவிழாவை கோவை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) புனிதா அந்தோணியம்மாள், பேரூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீகலா ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை கலைத்திருவிழாவில் பங்கேற்கும் வகையில் தயார்படுத்தி இருந்தனர். பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் அடுத்து வட்டார அளவிலும், பின்பு மாவட்ட அளவிலும் பங்கேற்பார்கள். மாநில அளவில் வெற்றி பெறுவோர் பள்ளிக்கல்வித்துறை மூலம் துபாய் அழைத்து செல்லப்படுவர்.

    முழுைமயான வளர்ச்சி என்பது மாணவர்கள் தன்னைத்தானே ஆராய்ந்து தன்னம்பிக்கையுடன் கலைநிகழ்வுகளில் பங்கேற்க விழைதல் ஆகும். கல்வி என்பது புத்தகம் மட்டும் சார்ந்தது அல்லாமல் கலைகள், விளையாட்டுத்திறன்கள் ஆகியவற்றையும் உள்ளடங்கி வளர்ப்பதாக இருத்தல் வேண்டும். கலைத்திருவிழா தமிழக அரசின் சிறந்த முன்னெடுப்பு ஆகும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×