என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் கலை இலக்கிய போட்டி
- 51 பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- தந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம் உள்ளிட்ட 73 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கலை விழாவை வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன.
இதில் நுண்கலை, இசை, கருவி இசை, தோற்கருவி, துளை காற்று கருவி, தந்திக் கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம் உள்ளிட்ட 73 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
விழாவில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 51 பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை வேதாரண்யம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், வேதாரண்யம் வட்டாட்சியர் ஜெயசீலன், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன், பள்ளி துணை ஆய்வாளர் சூரியமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.