என் மலர்
உள்ளூர் செய்திகள்
மகா சிவராத்திரியை யொட்டி தஞ்சையில், கலை நிகழ்ச்சிகள்
- 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை தஞ்சை திலகர் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அன்று மாலை 6 மணி முதல் 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை தஞ்சை திலகர் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இது குறித்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை திலகர் திடலில் நாளை மறுநாள் (18-ந்தேதி) மாலை 6 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 6.15 மணிக்கு திருமுறை விண்ணப்பம், 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.
தொடர்ந்து 7 மணிக்கு கயிலை வாத்தியம், 7.30 மணிக்கு லட்சுமணனின் தெருக்கூத்து, 8.15 மணிக்கு காமாட்சி பத்மநாபன் குழுவினரின் நாத இசை சங்கமம், 9 மணிக்கு சீர்காழி சிவசிதம்பர குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இரவு 10 மணிக்கு ராமலிங்கம் குழுவினரின் பட்டிமன்றமும், 11:30 மணிக்கு தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும், 12 மணிக்கு கலாபரத் மற்றும் தேஜாஸ் குழுவினரின் பரதநாட்டியமும்.
நள்ளிரவு 12.30 மணிக்கு திவ்யசேனாவின் குச்சிப்புடி நடனமும், அதிகாலை 1 மணிக்கு தேன் மொழி ராஜேந்திரனின் காவடியாட்டம், 1.30 மணிக்கு கரகாட்டம், 2 மணிக்கு நையாண்டி மேளம், 2.30 மணிக்கு சிவன் சக்தி ஆட்டம் நடைபெறுகிறது.
3 மணி முதல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்து சிற்பி, ஸ்ரீகாந்த், ஹரிகரன் மாளவிகாசுந்தர்,சோனியா குழுவினரின் இசை சங்கமம் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.