என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அர்த்தநாரீஸ்வரர் மலைகோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அர்த்தநாரீஸ்வரர் மலைகோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா](https://media.maalaimalar.com/h-upload/2022/12/08/1803623-2-tcode.webp)
சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்ற காட்சி.
அர்த்தநாரீஸ்வரர் மலைகோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அர்த்த நாரீஸ்வரர் மலைகோவிலில் இறைவன் ஜோதி ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வை தீபத் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
- இந்த தீபத் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைகோவிலில் இறைவன் ஜோதி ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வை தீபத் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையிலும், அதனை தொடர்ந்து வரும் பவுர்ணமி திதியில் அனைத்து சிவாலயங்களிலும் தீபத் திருவிழா கொண்டாடப் படுவது வழக்கம்.
அதன்படி திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலை கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று பவுர்ணமி திதியில் கொண்டாடப்பட்டது. அர்த்தநாரீஸ்வரர், ஆதிகே சவ பெருமாள் உடன் வந்து கோவிலின் பிரதான கோபுரத்தின் அருகில் நெய்தீபம் ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து உச்சி பிள்ளையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் கூம்பு கொளுத்தும் நிகழ்ச்சி
நடந்தது. அப்போது பக்தர்கள்
அரோகரா என கோஷ மிட்டனர். தொடர்ந்து கோவிலின் மேற்கு வாயில் அருகில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த தீபத் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்